இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் நள்ளிரவு நிகழ்ந்தது...

நள்ளிரவு 11.54 மணிக்கு தொடங்கிய சந்திரகிரகணம், அதிகாலை 1 மணிக்கு முழு சந்திரகிரகணமாக மாறி, 2.43 மணி வரை நீடித்தது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் நள்ளிரவு நிகழ்ந்தது...
x
சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப் பாதையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். இதன் 

காரணமாக சந்திரகிரகணம் தோன்றுகிறது. பெரும்பாலான நேரங்களில் சந்திரன் சரியான நேர் கோட்டில் வராததால் முழுமையான சந்திரகிரகணம் நிகழாது. ஆனால், இந்த முறை சந்திரன், பூமி மற்றும் சூரியன் அனைத்தும் ஒரே கோட்டில் சந்தித்ததால், முழு சந்திரகிரகணம் நிகழ்ந்தது. நள்ளிரவு 11.54 மணிக்கு தொடங்கிய சந்திரகிரகணம், அதிகாலை 1 மணிக்கு முழு சந்திரகிரகணமாக மாறி, 2.43 மணி வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து பகுதி சந்திரகிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு முடிவடைந்தது. இந்த முழு சந்திரகிரகணம் ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் தோன்றியது. இதையடுத்து சென்னை பிர்லா கோளரங்கில், பொதுமக்கள் பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்