மொபைலில் பதிவு செய்து கேட்டு 'திருக்குறளுக்கு' விளக்கம் - மாற்றுத்திறனாளி மாணவி சாதனை..!

திருக்குறளை தமது தோழியின் உதவியுடன் மொபைலில் பதிவு செய்து கேட்டு மனப்பாடம் செய்து 300க்கும் மேற்பட்ட திருக்குறளை விளக்கத்துடன் சொல்லி வியக்கவைக்கும் பள்ளி மாணவி...
மொபைலில் பதிவு செய்து கேட்டு திருக்குறளுக்கு விளக்கம் -  மாற்றுத்திறனாளி மாணவி சாதனை..!
x
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் கவிப்பிரியா சிறுவயதிலிருந்தே பார்வை குறைபாடு கொண்டவர். இருப்பினும் மனம் தளராத கவிப்பிரியா நன்றாக படித்து 10ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 

இந்நிலையில் படிப்பை தாண்டி தனது திறமையை வளர்த்துக்கொள்ள விரும்பிய கவிப்பிரியா திருக்குறளை தமது தோழியின் உதவியுடன் மொபைலில் பதிவு செய்து கேட்டு மனப்பாடம் செய்து 300க்கும் மேற்பட்ட திருக்குறளை விளக்கத்துடன் சொல்லி வியக்க வைக்கிறார்.   

Next Story

மேலும் செய்திகள்