சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை - காப்பகத்தில் விசாரணை நடத்திய மகளிர் போலீசார்...!

கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோடு பகுதியில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை சித்திரவதை செய்த சம்பவம் குறித்து காப்பகத்தில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை - காப்பகத்தில்  விசாரணை நடத்திய மகளிர் போலீசார்...!
x
கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோடு பகுதியில் சிஎஸ்ஐ மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகத்தில் இசக்கி என்ற சிறுமியை அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்தததாக புகார் எழுந்தது. இது குறித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்று குளச்சல் மகளிர் போலீசார், காவல்துறை ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் காப்பகத்தில் தீவிர விசாரணை நடத்தினர். காப்பகத்தில் உள்ள சிறுவர், சிறுமிகள் மற்றும் ஊழியர்களிடம் பல்வேறு விவரங்கள் திரட்டப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்