லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் கடிதம்

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் கடிதம்
x
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.கடந்த 20 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், தமிழக மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.தொழில் மற்றும் நகரமயமான மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் நான்கரை லட்சம் லாரிகள் ஓடவில்லை என்றும், இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும்,முட்டை, காய்கறி, பழங்கள் மற்றும் தமிழகத்தில் தயாராகும் ஏராளமான பொருட்கள் தேக்கமடைந்து வருவதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.தொடரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் ஏற்பட்டு வருவதையும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பிரச்சனையில்  தாங்கள், உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும், தங்கு தடையற்ற சரக்கு போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்