மருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு

அரசு மருத்துவ கல்லுாரி மாணவர் உதவித் தொகையை கணிசமாக உயர்த்தி, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு
x
அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு பயிற்சி மருத்துவ மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவர் அல்லாத முதுநிலை பட்டம், பட்டயம் மற்றும் உயர்சிறப்பு மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. 
இதை உயர்த்த வேண்டும் எனகோரிக்கை வலுத்து வந்த நிலையில், தற்போது உதவித் தொகையை உயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு, 13 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக
உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.முதுநிலை மாணவர்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 25 ஆயிரத்தில் இருந்து, 35 ஆயிரம் ரூபாயாகவும்உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, 26 ஆயிரம் ரூபாயில் இருந்து, 37 ஆயிரத்து 500  ரூபாயாக உதவித் தொகையைஉயர்த்தி முதலமைச்சர் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்