கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் : சுகாதார இயக்குநர் தலைமையில் குழு அமைத்து விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கர்

திருப்பூரில் கர்ப்பிணி பெண் கிருத்திகா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதார இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் : சுகாதார இயக்குநர் தலைமையில் குழு அமைத்து விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், திருப்பூரில் கர்ப்பிணி பெண் கிருத்திகா உயிரிழந்த சம்பவத்தில் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதார இயக்குநர் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பெண்கள் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்க முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். Next Story

மேலும் செய்திகள்