மருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு
அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கான உதவித்தொகையை கணிசமாக உயர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
* அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு பயிற்சி மருத்துவ மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவர் அல்லாத முதுநிலை பட்டம், பட்டயம் மற்றும் உயர்சிறப்பு மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு
உதவித் தொகை வழங்கி வருகிறது.
* இதை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்த நிலையில், தற்போது உதவித் தொகையைஉயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
* அதன்படி, உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு, 13 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
* முதுநிலை மாணவர்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 25 ஆயிரத்தில் இருந்து, 35 ஆயிரம் ரூபாயாகவும் உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
* இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, 26 ஆயிரம் ரூபாயில் இருந்து, 37 ஆயிரத்து 500 ரூபாயாக உதவித் தொகையை உயர்த்தி முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
Next Story