ரூ.50,000க்கு குழந்தையை விற்பனை செய்த தாய்...

சேலம் அரசு மருத்துவமனையில் பெற்ற குழந்தையை, தாயே 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.50,000க்கு குழந்தையை விற்பனை செய்த தாய்...
x
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் ராணி. இவருக்கு முதல் கணவர் மூலம் ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், 2 வது கணவர் மூலம் மீண்டும் தாயான ராணி, சேலம் அரசு மருத்துவமனையில் 4 வதாக, பெண் குழந்தையை பெற்றுள்ளார். இதனால் இரண்டாவது கணவனும் கைவிட செய்வதறியாது, திகைத்த ராணி, பெண் குழந்தையை துப்புரவு தொழிலாளி மூலம், 50 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் திடீரென்று மனம் மாறிய ராணி, துப்புரவு தொழிலாளியிடம் குழந்தையை திருப்பி தருமாறு கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. தகவலறிந்த காவல்துறையினர், இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதில், பெண் குழந்தை விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், விற்கப்பட்ட பெண் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.Next Story

மேலும் செய்திகள்