திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலை தனியார் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
பதிவு : ஜூலை 24, 2018, 03:37 PM
ஒரு புனிதரின் சமாதியை அரசு நிர்வகிக்க முடியாது என்று மனுதாரர் தரப்பிலும்,பராமரிக்கும் அதிகாரம் அரசிற்கு உள்ளது என்று அரசு தரப்பிலும் வாதம்
* சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி சமாதியை  தனியார் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

* முருகப் பெருமான் குறித்து 6 ஆயிரத்து 666 பாடல்களை பாடியுள்ள ஸ்ரீ பாம்பன் குமரகுரு தாசர் கடந்த 1929-ம் ஆண்டு மே 30-ந்தேதி மரணம்  அடைந்தார்.  இவரது சமாதியுடன்
கூடிய கோயில் சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது. 

* 1984-ம் ஆண்டு, இந்த சமாதியை, மகா தேஜோ மண்டல சபாவின் அப்போதைய செயலாளர், யாரிடமும் கலந்து பேசாமல் இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தார்.

* இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சபாவுக்கு  சாதகமாக தீர்ப்பு வந்த போதும்,  இந்து சமய அறநிலையத்துறை, நிர்வாக பொறுப்பில் இருந்து விலகாததால், பாம்பன் சுவாமி சமாதியை தங்களிடம் ஒப்படைக்க கோரி மகா தேஜோ மண்டல சபா செயலாளர் எம்.ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

* இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி, ஒரு புனிதரின் சமாதியை நிர்வகிக்க முடியாது. கோவில்களை மட்டும் தான் நிர்வகிக்க முடியும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

* இதையடுத்து, பாம்பன் சுவாமி சமாதியை மனுதாரரின் அமைப்பிடம் ஒப்படைத்தால் என்ன?'  என்று இந்து சமய அறநிலையத்துறையிடம் நீதிபதி டி.ராஜா கேள்வி எழுப்பினார். 

* இதற்கு பதில் அளித்த தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர்,  கோவில் மட்டுமல்லாமல், கோவிலுடன் கூடிய புனிதர்களின் சமாதியையும் பராமரிக்கும் அதிகாரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ளது என்றார்.

* இதற்காக கடந்த 2012-ம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், இந்த சமாதி அமைந்துள்ள சொத்து பல நூறு கோடி ரூபாய் மதிப்புடையது எனவும் வாதிட்டார்.

* இதையடுத்து வழக்கு விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி பக்தர்கள் வருகை குறைவால் 2 மணி நேரத்தில் தரிசனம்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைவால், 2 மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிகிறது.

6408 views

கோயில் நிலங்களை அடையாளம் காண தனி குழு : உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை

கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காணவும் அவற்றை மீட்கவும்,ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

445 views

பசுமை போர்த்திய சூழலில் காட்சி தரும் பாரியூர் கொண்டத்து காளியம்மன்

வயல்வெளிகளுக்கு நடுவே ஓங்கி உயர்ந்த ராஜகோபுரத்துடன், காட்சி தருகிறது பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில்

1147 views

கோவிலில் கொள்ளை முயற்சி - சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்

எடப்பாடி அருகே கோவிலில் 4 பேர் கொள்ளையடிக்க முயற்சிக்கும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதவாகியுள்ளது.

1503 views

பிற செய்திகள்

அரசு பெண்கள் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

சென்னை - எழும்பூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

304 views

காமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்கவில்லை - காமராஜரின் பேத்தி மயூரி

காமராஜருக்கு, சென்னை - மெரீனாவில் தகனம் செய்ய இடம் கேட்கவில்லை என்று அவரது பேத்தி டி.எஸ்.கே. மயூரி விளக்கம் அளித்துள்ளார்.

5856 views

தடையை மீறி விற்கப்படும் மதுபானங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

சுதந்திர தினத்தை ஒட்டி மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மது விற்பனை நடைபெற்று வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

566 views

கொள்ளிடம் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப் பெருக்கு

பழைய கொள்ளிடம் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இரண்டாவது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 3 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

162 views

ஆளுநர் தேநீர் விருந்து : நீதிபதிகள் புறக்கணிப்பு...

சுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை பெரும்பாலான நீதிபதிகள் புறக்கணித்தனர்.

1044 views

திருமணத் தடையை நீக்கும் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன்...

திருமணத் தடையை நீக்கும் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

623 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.