இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் மென்பொறியாளர்
விருத்தாச்சலம் அருகே மென்பொறியாளர் ஒருவர் இயற்கை விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். அது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள டி.வி.புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். பெங்களூருவில் உள்ள பிரபல நிறுவனத்தில் மென்பொறியாளராக சுரேஷ்குமார் வேலை பார்த்து வருகிறார்.
கைநிறைய பணம் கிடைத்தாலும் கூட, தன் சொந்த ஊரில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு அதிகமாகவே இருந்துள்ளது. இவர்களின் குடும்பமும் விவசாய பின்னணி என்பதால் அதில் ஈடுபடுவது சுரேஷ்குமாருக்கு எளிதாகவே இருந்தது.
தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை இவர் பயிரிட்டுள்ளார். மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் இயற்கை விவசாய முறையை பின்பற்றுவது என்ற ஒரு குறிக்கோளோடு அந்த முயற்சியில் முழு மூச்சாக இறங்கி உள்ளதாக சொல்கிறார், சுரேஷ்குமார்.
Next Story