மத்திய அரசு கொண்டு வரவுள்ள அணை பாதுகாப்பு மசோதா : தமிழகத்திற்கு பாதிப்பில்லை - மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம்

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் அணை பாதுகாப்பு மசோதாவால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வரவுள்ள அணை பாதுகாப்பு மசோதா : தமிழகத்திற்கு பாதிப்பில்லை - மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம்
x
நாடாளுமன்ற மாநிலங்களவையில், திமுக,  உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர்  அர்ஜூன் ராம் மேக்வால்,எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். அதில், 
 அணை பாதுகாப்பு மசோதா மூலம் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்று தெரிவித்துள்ளார். அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.    ஒரு மாநிலத்தின் அதிகாரத்திற்கு  உட்பட்டு வேறு மாநிலத்தில் உள்ள அணைகள்,  ஏற்கனவே உள்ளது போல், அதிகாரம் உள்ள அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.  அணைகளை பாதுகாக்க,  மாநில அணை பாதுகாப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது, அதற்கு பதில் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம்  கொண்டு வரப்பட உள்ளது. இதனாலும் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பதிலில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்