தங்கம், வெள்ளியை உருக்கி ஆடை, ஆபரணங்கள்...அசத்தி வரும் ராதாகிருஷ்ணன்
பதிவு : ஜூலை 23, 2018, 09:10 AM
கோவையில் தங்கம், வெள்ளியை உருக்கி ஆடை, ஆபரணங்களை செய்யும் புதுவித முயற்சியில், அசத்தி வருபவர் பற்றிப் பார்க்கலாம்.
வளையல், கம்மல், மோதிரம் போன்ற அணிகலன்களை உருவாக்கும் நகைப்பட்டறை தொழில் நலிவடைந்துவிட்டதால் போதிய வருமானமின்றி தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், புதுமையாக சிந்தித்து தங்கம், வெள்ளி போன்றவற்றை உருக்கி, ஆடைகளாக மாற்றும் கலையில் அசத்தி வருகிறார் கோவையை சேர்ந்த ராதாகிருஷ்ணன். கோவை மேட்டுப்பாளையம் சாலை தொப்பம்பட்டியில் வசிக்கும் இவர், ஆண்களுக்கான கோட், தலைப்பாகை, கைக்குட்டை போன்றவற்றை தயாரித்துள்ளார்.

தனது புதுமை முயற்சிக்கு மனைவி, மகன், மகள் உதவியாக இருப்பதாகக் கூறும் இவர், தனது சொந்த முயற்சியால், ஆடைகளை வடிவமைப்பதற்கான இயந்திரங்களை தாமே உருவாக்கியுள்ளார். வெள்ளியால் உருவாக்கப்படும் ஆடைகளுக்கு 2 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், தங்கத்தாலான ஆடைகளை 35 லட்சம் ரூபாய் செலவிலும் உருவாக்க முடியும் என்கிறார். நலிவடைந்துவரும் நகைப்பட்டறை தொழிலால் சோர்ந்துவிடாமல், எதிலும் புதுமையை புகுத்தினால் வருமானம் ஈட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார், ராதாகிருஷ்ணன்.


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4707 views

பிற செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோஷம்

போலி சிம்கார்டு வழக்கில் கைதான 2 மாவோயிஸ்ட்கள்

9 views

முகிலனை தீவிரமாக தேடி வருவதாக சி.பி.சி.ஐ.டி. உயர் நீதிமன்றத்தில் அறிக்கை

வழக்கை ஏப். 8க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவு

16 views

"நானும் எனது மகனும் சமூக வலைத்தளத்தில் இல்லை" - டி.ராஜேந்திரன்

"தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை"

39 views

12 மணி நேரம் தொடர்ந்து தவில் வாசிப்பு - மாணவர்கள் கண்ணை கட்டி கொண்டு சாதனை முயற்சி

நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூ நாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது

34 views

நாடார் சமூகத்தினரை இழிவாக சித்தரிக்கப்பட்ட விவகாரம் - சர்ச்சைக்குரிய பகுதி நீக்கப்பட்டதாக தகவல்

சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட சாதி ஆடை மாற்றம் பற்றி எழுதப்பட்டுள்ளது.

102 views

முகிலன் வழக்கு - சிபிசிஐடி அறிக்கை தாக்கல்

முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி தொடர்ந்த ஆள்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

66 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.