இழந்த அடையாளத்தை மீண்டும் பெறுகிறது கூவம் ஆறு...

சென்னையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான கூவம் ஆற்றை மறுசீரமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது தமிழக அரசு. இது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
இழந்த அடையாளத்தை மீண்டும் பெறுகிறது கூவம் ஆறு...
x
ஒரு காலத்தில் சென்னைக்கு அழகு சேர்த்த கூவம் ஆறு, இன்று அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது. ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுசூழல் சீரமைப்பு திட்டம் மூலம் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது தமிழக அரசு. இதற்காக திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு என்ற இடத்தில் துவங்கி கடலில் கலக்கும் இடம் வரை, 32 கிலோ மீட்டர் துாரத்துக்கு முதல் கட்டமாக, 604 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, கழிவுநீர் அகற்று வாரியம் உள்ளிட்ட ஆறு அரசு துறைகளுடன்சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஒருங்கிணைந்து பணிகளை விரைவுப்படுத்தி வருகிறது. திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில், அதனை தொடர்ந்து முறையாக பராமரிக்கப்பட வேண்டியது அவசியம் என்கிறார் கூவம் நதியை பற்றி ஆய்வு செய்துள்ள சென்னையை சேர்ந்த பத்மபிரியா.

இதே போல, கூவம் ஆற்றில் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிறார் ஓய்வு பெற்ற பொதுப்பணி துறை செயற் பொறியாளர் திருநாவுக்கரசு. கூவம் கரையோரம் 14 ஆயிரத்து 257 குடும்பங்கள் உள்ள நிலையில், அதில் தற்போது 7 ஆயிரம் குடும்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன. எட்டு இடங்களில் மிதவை தடுப்பான் அமைத்து குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒன்பது இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ள நிலையில் சேத்துப்பட்டு பகுதியில் முதல் கட்டமாக ஒரு பூங்காவின் பணிகள் தொடங்கியுள்ளன. பேபி கால்வாய் என்ற பெயரில் ஆற்றின் இருபுறமும் கற்கள் பதித்து நீர் ஓட்டத்தை முறைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. கூவம் கரையோரம் முழுவதும் பாதுகாப்பு சுவர் கட்டும் பணி துவங்கியுள்ளது.

கழிவுநீர் நேரடியாக கூவத்தில் கலக்கும் 108 இடங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவை அடைக்கப்பட உள்ளன

Next Story

மேலும் செய்திகள்