புதிய 8 மாடி மருத்துவமனை கட்டட சாரம் சரிந்து விபத்து - சென்னையில் நடந்த கோர விபத்தில் ஒருவர் பலி...

சென்னை கந்தன்சாவடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக் கட்டடத்தின் சாரம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதிய 8 மாடி மருத்துவமனை கட்டட சாரம் சரிந்து விபத்து - சென்னையில் நடந்த கோர விபத்தில் ஒருவர் பலி...
x
சென்னை கந்தன்சாவடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக் கட்டடத்தின் சாரம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சார இணைப்பு கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட சாரத்தில், 48 கட்டிட தொழிலாளர்கள்  பணி செய்து வந்த நிலையில், திடீரென பாரம் தாங்காமல் சாரம் சரிந்தது.  

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, இடிபாடுகளுக்கு இடையே சடலமாக கிடந்த பப்ளூ என்ற பீஹார் இளைஞர் மீட்கப்பட்டார். மேலும், இடிபாடுகளில் சிக்கியிருந்த 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர்

இந்த சம்பவத்தில் உயிரிழந்த பீகார் மாநில தொழிலாளர் பப்லுவின் குடும்பத்திற்கு, தொழிலாளர் நல வாரியத்திலிருந்து 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடிபாடுகளில் சிக்கி, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சை செலவுகளை அரசே ஏற்கும் - சுகாதாரத்துறை செயலர் தகவல் 

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சை செலவுகளை அரசே ஏற்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விபத்து நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 


கட்டுமான நிறுவனம் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு பொறியாளர் உள்பட இருவ​ரிடம் போலீசார் விசாரணை 

இதனிடையே, கட்டுமான நிறுவனம் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல், உயிருக்கு அச்சுறுத்தல் விளைவித்தல் உள்ளிட்ட  4 பிரிவுகளின் கீழ் தரமணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  மேலும் அந்த கட்டுமான நிறுவன பொறுப்பு அதிகாரி முருகேசன், பொறியாளர் சிலம்பரசன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தரமணி மருத்துவமனை கட்டிட விபத்து: "தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை" - மாநகர காவல் ஆணையர்

தரமணி மருத்துவமனை கட்டிட விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சம்பவ  இடத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்