மாற்றந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு - மக்களவையில் அதிமுக எம்.பி. வேணுகோபால் பேச்சு
மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு, நடந்து கொள்வதாக, அதிமுக எம்பி வேணுகோபால் மக்களவையில், குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில், அதிமுக எம்.பி.வேணுகோபால் பேசினார். அப்போது, மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கப்படுவதாகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான உதவிதொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும், அந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். யூஜிசி சிறப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அதனை கலைக்க வேண்டாம் என்றும்,அதிமுக எம்.பி.வேணுகோபால் கோரிக்கை விடுத்தார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததற்கு நன்றி கூறிய அவர், கர்நாடக அரசு முறையாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Next Story