"ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை பாதுகாக்க, தனிப் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
x
உசிலம்பட்டி விமலாதேவி கொலை வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  ஆணவ கொலைகளை ஒடுக்க  போதிய நிதி ஒதுக்கி, ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு 2016ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில், உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி, உள்துறை செயலாளருக்கு எதிராக அவமதிப்பு வழக்கை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி  அமைப்பின் மாநில செயலாளர் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்திய நாராயணன் முன்னிலையில் வந்தபோது, தமிழக உள்துறை செயலாளர் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் பாதுகாக்க, அனைத்து மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் 24 மணி நேர அடிப்படையில் 1091, 1077 உள்ளிட்ட உதவி எண்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்