நடுத்தர குடும்பத்தில் பிறந்து விமானி ஆகும் கனவை நனவாக்கிய பெண்

நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் விமானியாக வேண்டும் என்ற கனவை நனவாக்கி இருக்கிறார் மதுரையை சேர்ந்த ஒரு பெண்.அவரின் இந்த கனவுப் பயணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
நடுத்தர குடும்பத்தில் பிறந்து விமானி ஆகும் கனவை நனவாக்கிய பெண்
x
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். அரசுப் பேருந்து ஓட்டுநரான இவருக்கு 2 மகள்கள். இதில் மூத்த மகள் காவ்யாவுக்கு பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே விமானத்தின் மீது அளவு கடந்த காதல்... 

விமான ஓட்டியாக வானில் வலம் வர வேண்டும் என்று  தன் மனதில் நிறுத்திய காவ்யா, அதை செயல்படுத்தும் திட்டத்தை கையில் எடுத்தார். மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த காவ்யா, கர்நாடக மாநிலம் ஜக்கூரில் உள்ள மத்திய அரசின் விமான பயிற்சி மையத்தில் சேர்ந்தார். 

அரசின் உதவித் தொகையோடு விமான பயிற்சியை தொடங்கிய காவ்யா, முழு கவனத்தையும் அதில் செலுத்தினார். இரண்டரை ஆண்டு பயிற்சிக்கு பிறகு 200 மணி நேரம் வானத்தில் பறந்து தன் இலக்கை எட்டினார். தற்போது விமானியாவதற்கான உரிமத்தையும் மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளார் இந்த சாதனைப் பெண்... 

நடுத்தர குடும்பத்தில் பிறந்த உனக்கு எதற்கு இந்த வீண் கனவு? என ஏளனம் பேசியவர்கள் எல்லாம் இன்று காவ்யாவை நிமிர்ந்து பார்க்கிறார்கள்... 

விடா முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் எதுவும் சாத்தியம் ஆகும் என்பதற்கு விமானியான காவ்யாவும் ஒரு உதாரணமே.  



Next Story

மேலும் செய்திகள்