மேட்டூர் அணை இன்று காலை 10 மணிக்கு திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து, பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணை இன்று காலை 10 மணிக்கு திறப்பு
x
மேட்டூர் அணையிலிருந்து, பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்.  கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் காவிரி நீரின் அளவு, விநாடிக்கு, 65 ஆயிரம் கன அடியாக குறைந்து விட்டது. இருந்தபோதிலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டி உள்ளது. இன்று திறக்கப்படும் தண்ணீர், விரைவில் டெல்டா பகுதியை வந்தடையும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

"மேட்டூர் அணை தண்ணீர் 2 நாட்களில் திருச்சி வந்தடையும்"

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் 2 நாட்களில் திருச்சி வந்தடையும் என்றும் இதன் மூலம் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 75 ஏரி, குளங்களில் 2 டி.எம்.சி தண்ணீர் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்