8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த நில உரிமையாளர்களிடம் காவல்துறை அத்துமீறக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்.

8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த நில உரிமையாளர்களிடம் காவல்துறை அத்துமீறக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்.
8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த நில உரிமையாளர்களிடம் காவல்துறை அத்துமீறக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்.
x
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் போது நில உரிமையாளர்களை அச்சுறுத்த கூடாது என காவல்துறையினருக்கு 
அறிவுறுத்தியுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவஞானம், நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய சாலைப் போக்குவரத்து துறை சார்பில் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார். எந்த வளர்ச்சித் திட்டங்களாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாகவும் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளின் போது நில உரிமையாளர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், திட்டத்தை செயல்படுத்தும் முன் நில உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டனர். முக்கியமான இந்த வழக்கில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அதிகாரி யாரேனும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டாமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதையடுத்து, கையகப்படுத்தும் பணிகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், உடனடி அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் அளவீடு பணிகளின் போது உரிமையாளர்களை துன்புறுத்த கூடாது எனவும் காவல் துறைக்கு அறிவுறுத்துவதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு ஆகஸ்ட் 2 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்