கைது செய்யப்படுவோம் என்ற பயம் இயக்குனர் பாரதிராஜாவுக்கு இல்லையா..? உயர் நீதிமன்றம் கேள்வி

கைது செய்யப்படுவோம் என்ற பயம் இயக்குனர் பாரதிராஜாவுக்கு இல்லையா..? உயர் நீதிமன்றம் கேள்வி
கைது செய்யப்படுவோம் என்ற பயம் இயக்குனர் பாரதிராஜாவுக்கு இல்லையா..? உயர் நீதிமன்றம் கேள்வி
x
திரைப்பட விழா ஒன்றில் இந்து கடவுள்களை விமர்சித்தது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறுமாறு பாரதி ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை நிறைவேற்ற அவகாசம் கோரி பாரதிராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தபோது, 'வேண்டுமானால் அபராதத்துடன் கூடிய கால அவகாசம் தருமாறு பாரதிராஜா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனே, அபராதம் செலுத்தி விட்டால் செய்த தவறு சரியாகிவிடுமா எனவும் கைது செய்யப்படுவோம் என்ற பயம் பாரதிராஜாவுக்கு இல்லையா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, மனுவை வாபஸ் பெறுவதாக பாரதிராஜா தரப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று மனுவை தள்ளுபடி செய்ததோடு, புதிய மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டா​ர். 

Next Story

மேலும் செய்திகள்