அருங்காட்சியகத்தில் ஸ்பிரிட் பற்றாக்குறை - சிதையும் நிலையில் இறந்து போன விலங்குகள்

புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஸ்பிரிட் பற்றாக்குறையால் இறந்துபோன விலங்குகளை பதப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் ஸ்பிரிட் பற்றாக்குறை - சிதையும் நிலையில் இறந்து போன விலங்குகள்
x
அருங்காட்சியகத்தில் ஸ்பிரிட் பற்றாக்குறை

அங்குள்ள அருங்காட்சியகத்தில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை நீண்ட நாட்கள், கெடாமல் வைத்திருப்பதற்காக கண்ணாடி குடுவைக்குள் ஸ்பிரிட் ஊற்றி மெழுகு மூலம் அடைத்து பாதுகாத்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை, இந்த ஸ்பிரிட்டை மாற்றி பதப்படுத்தினால் தான், அரியவகை உயிரினங்களின் உடல்கள் கெடாமல் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக ஸ்பிரிட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பதப்படுத்தப்பட்ட உயிரினங்கள் சேதமடைந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்