சிறுமி பாலியல் வன்முறை சம்பவம் : தனியார் பாதுகாப்பு நிறுவன தலைவரிடம் போலீசார் விசாரணை

சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்களுக்கே தொடர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் வன்முறை சம்பவம் : தனியார் பாதுகாப்பு நிறுவன தலைவரிடம் போலீசார் விசாரணை
x
இந்த சம்பவத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரில் 12 பேர் சென்னையின் பிரபலமான தனியார் பாதுகாப்பு  நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகின்றனர். 

இதில் 2 பேர் இதே நிறுவனத்தில் பணிபுரிந்த  முன்னாள் ஊழியர்கள் என்பதும், இதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் முக்கிய குற்றவாளி உட்பட 4 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான 66 வயது ரவிக்குமார் இந்த நிறுவனத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளாக லிப்ட் ஆபரேட்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். 

ரவிக்குமார் தான் முதலில் சிறுமியை பலவந்தப்படுத்தி பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு ரவிகுமார் மற்றவர்களிடம் நடந்த சம்பவங்களை கூறி சிறுமியின் வாழ்க்கையை சீரழித்து இருக்கிறான்... 

ரவிக்குமாருடன் சேர்ந்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட லிப்ட் ஆபரேட்டர்களான 60 வயது பரமசிவன், 50 வயதான தீனதயாளன் உள்ளிட்டோரும் இதே நிறுவன ஊழியர்கள் தான்... 

இதே நிறுவனத்தில்  55 வயதுடைய குணசேகரன் என்பவர் கடந்த 5 வருடங்களாக தோட்ட வேலை செய்து வருகிறார். மீதமுள்ள 8 பேர்களும் 50 வயதுக்கு குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

பாதுகாப்பு நிறுவன உரிமையாளர் பாலசுப்பிரமணியம் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் இந்த பாதுகாப்பு நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனமானது சென்னையின் பிரபல கல்வி நிறுவனங்கள், வங்கிகள், துறைமுகம், விமான நிலையம், எல்ஐசி போன்ற இடங்களுக்கு சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது... 


Next Story

மேலும் செய்திகள்