அடிப்படை வசதி செய்து தரக் கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
மதுராந்தகம் அருகே அரசு பள்ளியில் அடிப்படை வசதி செய்து தரக் கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
அங்குள்ள அச்சிறுப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குடிநீர், கழிவறை, சத்துணவுக்கான சமையல் கூடாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கழிவறை இல்லாததால் இயற்கை உபாதைகளுக்கு வெளியே செல்லும் அவலநிலை இருப்பதாகக் கூறிய மாணவர்கள், இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
Next Story