மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர்வரத்து

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரத்து 64 கனஅடியாக அதிகரித்ததை தொடர்ந்து, நீர்மட்டம் 95 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர்வரத்து
x
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை தொடர்வதால், கர்நாடகாவின் கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1லட்சத்து 70 ஆயிரத்து 64 கனஅடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. 

அணையின் நீர்மட்டம் 95 புள்ளி ஏழு மூன்று அடியாகவும், 59 புள்ளி நான்கு நான்கு டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.  நீர்வரத்து இதே நிலையில் இருக்கும் பட்சத்தில் இன்று மாலைக்குள் மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்