மலைவாழ் மக்கள் கொண்டாடும் இளம் தியாக சுடர் 'மகாலட்சுமி' ஆசிரியை

ஆடம்பர வாழ்க்கை, காதல் என இளமையை கொண்டாடவேண்டிய வயதில், பல தியாகங்களை செய்து மலைவாழ் குழந்தைகளின் மாற்றாந்தாயாக வாழ்ந்து வருகிறார் ஆசிரியை மகாலட்சுமி... அவரின் தியாகங்களை சொல்லி மாளாது..
மலைவாழ் மக்கள் கொண்டாடும் இளம் தியாக சுடர் மகாலட்சுமி ஆசிரியை
x
திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி... பார்வை குறைபாடுடைய தந்தை...மன நலம் பாதித்த தாய், கூலி வேலைக்கு செல்லும் சகோதரி என அவரின் குடும்ப நிலையை அவர் எடுத்துரைக்க, கேட்கும் நமக்கும் கண்கள் குளமாகின்றன...இத்தனை ஏழ்மை நிலையில், அரும்பாடு பட்டு படித்த மகாலட்சுமிக்கு, ஜவ்வாது மலையில் உள்ள பழங்குடியின பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை கிடைத்தது...பள்ளிக்கு முதல் நாள் சென்ற அவருக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது...



இந்த ஏமாற்றத்தை சற்றும் எதிர்பார்க்காத மகாலட்சுமி, அத்துடன் சோர்ந்துவிடவில்லை... பள்ளியில் மாற்றத்தை உருவாக்க ஆயத்தமானார்... இதற்காக முடிவெட்டிவிடுவது, புது துணிகள் வாங்கி கொடுப்பது என அவர் மேற்கொண்ட முயற்சிகள், அவருக்கு தலைவணங்க வைக்கின்றன... அவரின் அருஞ்செயல்களுக்கு பலன்கள் கிடைத்தன. படிப்படியாக பள்ளியில் மாணவர் சேர்க்கை உயர தொடங்கியுள்ளது... ஆனந்த கண்ணீருடன் அந்த தருணத்தை விவரிக்கிறார் மகாலெட்சுமி...குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது கல்வி கொடுப்பதுடன் மகாலட்சுமியின் கனவுகள் நின்றுவிடவில்லை...  செம்மர கடத்தலில் ஈடுபடாமல் தடுத்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல் என மலைவாழ் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவே குழந்தைகளின் கல்வியை கருவியாக மகாலட்சுமி கையாண்டுள்ளார் மகாலட்சுமி... பெரும்பாலான இளம் தலைமுறையினர் வெறும் கேளிக்கைக்காகவே சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் நிலையில், அதிலும், மகாலட்சுமி தன் மலைவாழ்குழந்தைகளுக்காக உதவும் கரங்களையே தேடியுள்ளார்.அதிலும் அவருக்கு பலன் கிடைத்துள்ளது. 

ஆசிரியர் பகவானை போலவே ஆசிரியை மகாலட்சுமிக்கும் பணியிட மாற்றம் வழங்கியபோது, அப்பள்ளி குழந்தைகள் மட்டுமல்லாது பெற்றோர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். அவர்கள் நடத்திய பலகட்ட போராட்டங்களின் விளைவாக இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளி குழந்தைகளிடம் ஆசிரியை பற்றி கேட்டபோது, அடுக்கடுக்காக அவரது தியாகங்களை பட்டியலிடுகின்றனர்...மாணவர்களே இல்லாத தொடக்கப்பள்ளியை தன் கடின உழைப்பால் ,நடுநிலைப்பள்ளியாக உயர்த்தி 350க்கும் அதிகமான மாணவர்களுடன்  பயணித்து கொண்டிருக்கும் மகாலட்சுமி சாதனை பெண் என்பதில் ஐயமில்லை...

பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு மாகாலட்சுமி மறுக்க முடியாத உதாரணம்...


Next Story

மேலும் செய்திகள்