மேட்டூர் அணை ஜூலை 19ம் தேதி திறப்பு...

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வருகிற 19ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேட்டூர் அணை ஜூலை 19ம் தேதி திறப்பு...
x
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக நீர்வரத்து கணிசமாக உயர்ந்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89 புள்ளி ஒன்று எட்டு அடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பருவமழை தொடர்ந்து தீவிரமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, வருகிற 19ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்பட்டு, பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்வதோடு, நிலத்தடி நீர் உயர்வடைந்து, குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த இயலும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சம்பா சாகுபடிக்குத் தேவையான, நீண்ட கால நெல் ரகங்கள்,யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் போதிய அளவு இருப்பு வைக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்