நிர்மலா தேவி விவகாரம் : 1160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆயிரத்து 160 பக்கங்கள் கொண்ட முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிர்மலா தேவி விவகாரம் : 1160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
x
* பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. 

ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரிக்க தொடங்கினர். நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரித்த போலீசார், அவர் அளித்த தகவலின் பேரில், 

பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் 80க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

* இந்த வழக்கில் நிர்மலாதேவி 6 முறையும், முருகன் 5 முறையும், கருப்பசாமி நான்கு முறையும் ஜாமீன் கோரி இருந்தனர். ஆனால் நீதிமன்றங்கள் அவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தன.

* இதனையடுத்து நிர்மலா தேவியின் குரல் மாதிரியை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னையில் அவருக்கு குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டது. 

* நான்காவது முறையாக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரியிருந்தார். ஜாமீன் மனுவை தள்ளுபடி 

செய்த நீதிமன்றம், கல்லூரி மாணவிகளின் எதிர்காலம் கருதி 6 மாத காலத்திற்குள் வழக்கை முடிக்கவும், செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. 

* அதன்படி நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் மீது ஆயிரத்து 160  பக்கங்கள் கொண்ட முதல் குற்றப்பத்திரிக்கையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். 

* பிரிவு 370 மற்றும் 120 ன் கீழ் ஆள்கடத்தல் மற்றும் மூவர் சேர்ந்து குற்றச் சதி செய்தல், பிரிவு370 மற்றும் 373 ன் கீழ் மைனர் பெண்களை பாலியல் 

தொழிலுக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

* நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரை தவிர வேறு யார் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை என சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

* செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் முழுமையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்