விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு விரைவில் மாற்று நிலம் பட்டா - அதிகாரிகள்

சேலம் விமானநிலை விரிவாக்க பணிக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு விரைவில் மாற்று நிலத்திற்கான பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு விரைவில் மாற்று நிலம் பட்டா - அதிகாரிகள்
x
விரைவில் மாற்று நிலம் பட்டா

சேலம் விமானநிலைய விரிவாக்க பணிகளுக்காக ஓமலூர் அருகிலுள்ள கமலாபுரம், பொட்டியபுரம், தும்பிபாடி, சிக்கனம்பட்டி  ஆகிய கிராமங்களில் இருந்து 570 ஏக்கர் விளைநிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது. மொத்தம் 581 பேரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், 49 பேருக்கு மட்டுமே மாற்று நில பட்டா வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 532 பேருக்கு நில ஆர்ஜிதம் செய்யும் பணி முடிந்து பட்டா வழங்க தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில், மாற்றுநிலத்திற்கான பட்டா 532 பேருக்கும் வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் உறுதி அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்