"நீதிமன்ற தீர்ப்பை சி.பி.எஸ்.இ செயல்படுத்த வேண்டும்" - அமைச்சர் செங்கோட்டையன்

"நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்புமுனையாக அமைந்துள்ளது" - செங்கோட்டையன்
நீதிமன்ற தீர்ப்பை சி.பி.எஸ்.இ செயல்படுத்த வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்
x
நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை சிபிஎஸ்இ செயல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். 

"மேல்முறையீடு செய்ய கூடாது" - அன்புமணி

தமிழில் நீட் தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும்  196 கருணை மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது  என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இதுதான் சரியான பரிகாரம் என்றும் தெரிவித்துள்ளார். 

"நீட் விவகாரம்- சி.பி.எஸ்.இ.தான் முடிவு எடுக்க வேண்டும்"

நீட் விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், இதில் தமிழக அரசு ஒன்றும் செய்ய முடியாது என்றும், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

"மருத்துவ கலந்தாய்வுக்கு பிறகு பொறியியல் கலந்தாய்வு"

"பொறியியல் கல்லூரிகள் கால தாமதமாக திறக்கப்பட வாய்ப்பு"

உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேட்டி 

நீட் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்துள்ள  தீர்ப்பை அடுத்து, வருகின்ற 13 ந் தேதி நீதிமன்றத்தின் அனுமதி பெற்று பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்