பொதுத்துறை நிறுவனங்கள் : தணிக்கை குழு சொல்வது என்ன?

தமிழகத்தின் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு தணிக்கை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் : தணிக்கை குழு சொல்வது என்ன?
x
"நஷ்டத்தில் பொதுத்துறை நிறுவனங்கள்"

2016-17ல் தமிழகத்தின் போக்குவரத்து துறை உள்ளிட்ட 25 பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் 9 ஆயிரத்து 366 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கை குழு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. 2017 மார்ச் 31ல், தமிழகத்தில் 74 பொதுத்துறை நிறுவனங்கள் இருந்ததாகவும், அதில் 6 நிறுவனங்கள் செயல்படாமல் இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்படாத நிறுவனங்களை முட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு மொத்தமாக 78 ஆயிரத்து 854 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. 68 பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் 2 லட்சத்து 84 பேர் வேலை பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. செயல்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் 2012-13 முதல் 2016-17 வரை தொடந்து நஷ்டத்தில் தான் இருப்பதாகவும், இருந்தாலும், நஷ்டத்தின் அளவு 13 ஆயிரத்து 616 கோடியில் இருந்து 8 ஆயிரத்து 435 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

74 பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டம் 2012-13ல் 38 ஆயிரத்து 233 கோடியில் இருந்து 2016-17ல்  78,854 கோடியாக உயர்ந்துள்ளது. 2012-13ல் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் 62 ஆயிரத்து 44 கோடியாக இருந்தது, இது அதிகரித்து 2016-17ல் 1 லட்சத்து 4 ஆயிரத்து 151 கோடியாக உள்ளது. கடனுக்கு கட்டப்பட்டு வந்த வட்டியின் அளவு, 2012-13ல் 6 ஆயிரத்து 649 கோடியாக இருந்த நிலையில், 2016-17 அது 13 ஆயிரத்து 846 கோடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம் தமிழ்நாடு செய்திதாள் நிறுவனம், டைடல் பார்க் போன்ற நிறுவனங்கள் லாபத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Next Story

மேலும் செய்திகள்