லோக் ஆயுக்தா மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்

முதலமைச்சர் முதல், அரசு அலுவலர்கள் வரை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக் ஆயுக்தா மசோதா, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்
லோக் ஆயுக்தா மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்
x
லோக் ஆயுக்தா மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் பதவிக்கு வருபவர், உயர்நீதிமன்ற நீதிபதியாகவோ, முன்னாள் நீதிபதியாகவோ இருக்க வேண்டும். ஊழல் தடுப்புக் கொள்கையில்,
பொது நிர்வாகத்தில் 25 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக அவர் இருக்க வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா அமைப்பில் நான்கு உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்றும், அதில் இருவர் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக முதலமைச்சர் இருப்பார். உறுப்பினர்களாக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இருப்பார்கள். 

தேர்வு செய்யப்படும் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆளுநர் அனுமதியை பெற்றபின் பதவி ஏற்பர். 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என்று சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள் உள்ளிட்டோரை விசாரிக்கும் அதிகாரம் கொண்டதாக லோக் ஆயுக்தா இருக்கும். உரிமையியல் நீதிமன்ற அதிகாரங்களை கொண்டதாக லோக் ஆயுக்தா அமைப்பு இருக்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அரசு ஊழியரை பணி மாறுதல் செய்தல், பணியிடை நீக்கம் செய்தல் உள்ளிட்டவற்றை லோக் ஆயுக்தா பரிந்துரைக்கும்.

லோக் ஆயுக்தா அமைப்பிற்கான செலவினங்கள், மாநில அரசு தொகுப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் சட்ட மேசாதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்