12 ஆண்டுகளாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவளிக்கும் மனிதர்

திருச்சி பீம்நகரை சேர்ந்த ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் ஆதரவற்ற முதியவர்களுக்கு இலவசமாக உணவளித்து வருகிறார்
12 ஆண்டுகளாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவளிக்கும்  மனிதர்
x
* திருச்சி பீம் நகரைச் சேர்ந்த பாரதி, டிப்ளமோ சிவில் இஞ்சினியரிங் முடித்தவர். தற்போது சொந்தமாக தொழில் செய்து வந்தாலும் இவர் தன்னுடைய முழு நேர தொழிலாக செய்வது ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவளிப்பது தான்.

* சிறு வயதிலிருந்தே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த பாரதி, அவ்வப்போது சிறு சிறு உதவிகள் செய்து வந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு உதவும் மனங்கள் என்கிற தொண்டு அமைப்பை ஏற்பபடுத்தினார்.

* அந்த அமைப்பின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தினமும் உழைக்க இயலா முதியவர்கள் சுமார் 70 பேருக்கு மதிய உணவளித்து வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக இந்த சேவையை தொடர்ந்து வருகிறார். இவரைப் பற்றி கேள்விப்பட்டு, சிலர் இவருக்கு தேவையான உதவிகளை செய்கின்றனர்.

* திருமணத்திற்குப் பின், மனைவி, குழந்தைகள் என்றாகிவிட்டால், தனது சேவையை தொடர முடியாது என்பதால் திருமணத்தை தவிர்த்து விட்டதாக சொல்கிறார்.

* தினமும் மதிய உணவுக்காக நண்பகல் 11 மணியிலிருந்தே இவரது வீட்டில், முதியவர்கள் வந்து காத்திருக்க தொடங்கி விடுகின்றனர். சரியாக 1 மணி அளவில் கடவுளை வழிபட்டுவிட்டு அவர்களுக்கு தனது கையாலேயே உணவைப் பரிமாறுகிறார் பாரதி. அமர்ந்து சாப்பிட முடியாதவர்கள், நோயாளிகளுக்கு அவர்கள் கொண்டு வரும் பாத்திரத்தில் சாப்பாட்டை போட்டுக் கொடுத்து விடுகிறார்.

* பொதுவாக 1 மணி முதல் 3 மணி வரை உணவளிக்கும் அவர், அதன் பிறகு வருபவர்களுக்கு வீட்டில் இல்லையென்றாலும் அருகில் உள்ள ஹோட்டலுக்குச் சென்று வாங்கிக் கொடுக்கிறார்.


* ஆதரவற்றவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், உடல்நலக் குறைவால் வேலைக்கு செல்ல முடியாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என இங்கு சாப்பிட வருபவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும், ஒரு சோகம் ஒளிந்திருக்கிறது. நூறு வயதை தாண்டிய மூதாட்டி ஒருவரும் தன் தள்ளாத வயதில் இங்கு வந்து உணவு வாங்கி கொண்டு செல்கிறார்.

* பெற்ற பிள்ளைகள் தங்களை கைவிட்டாலும் தன்னுடைய, பெற்றோர் போல எண்ணி, உணவளிக்கும் பாரதிக்கு அனைவரும் உணர்ச்சிபெருக்கோடு நன்றி கூறிவிட்டுச் செல்கின்றனர்.


3

Next Story

மேலும் செய்திகள்