என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் யார்..?

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் யார்? அவன் பின்னணி என்ன?
என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் யார்..?
x
என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் யார்?

சென்னை மயிலாப்பூரைச்  சேர்ந்த ஆனந்தனுக்கு வயது 28. பிளம்பராக வாழ்க்கையை தொடங்கிய ஆனந்தன், பின்னாளில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளான். 

ஐஸ் ஹவுஸ், பட்டினப்பாக்கம், மைலாப்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில், ஆனந்த் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாதாரண சங்கிலி பறிப்பு திருடனாக இருந்த ஆனந்தன், பிற்காலத்தில் ஒன்பது பேர் கொண்ட நகை பறிப்பு கும்பலுக்கு தலைவன் ஆனான். கடந்த 2014-ஆம் ஆண்டிலே காவலர் ஒருவரை தாக்கியதாக, ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளான். 

2015-ஆம் ஆண்டில், ஆனந்தன் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, 2016-ஆம் ஆண்டிலும், அவன் மீது 3 கொலை முயற்சி வழக்குகள் போடப்பட்டுள்ளன. 5 கொலை முயற்சி வழக்குகள் உட்பட, ஆனந்த் மீது மொத்தமாக 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுவரை, அவன் 8 முறை சிறை சென்றுள்ளான். 

எந்த நேரத்திலும், போதையிலே பொழுதைக் கழிக்கும் ஆனந்தன், காவலர் ராஜவேலுவை தாக்குவதற்கு முன்பு, பெரிதாக அறியப்படாதவன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 






சென்னையில் ஆனந்தன் என்பவர் சற்று முன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை



என்கவுன்டர் நடந்தது எப்படி? - தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம்


தவிர்க்க முடியாத காரணத்தினால் ரவுடி ஆனந்தன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் - கருணாநிதி, காவல்துறை அதிகாரி ஓய்வு


என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக் கொலை - சித்தண்ணன், காவல்துறை அதிகாரி ஓய்வு கருத்து 


ரவுடி ஆனந்த் சுட்டுக்கொலை : சம்பவம் நடைபெற்றது எப்படி?



ஆனந்தன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: பின்னணி என்ன..? - காவல்துறை உயரதிகாரி விளக்கம்


ரவுடி ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் நியமனம்





Next Story

மேலும் செய்திகள்