ஐபிஎல் பைனலுக்கு மாஸாக என்ட்ரி கொடுத்த குஜராத்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
x
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். பின்னர், 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 19.3 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்