கடைசி போட்டியிலும் ஹைதராபாத்தை விடாது துரத்திய சோதனை

ஐபிஎல் தொடரின் 70வது மற்றும் கடைசி லீக் போட்டியில், ஹைதராபாத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
x
ஐபிஎல் தொடரின் 70வது மற்றும் கடைசி லீக் போட்டியில், ஹைதராபாத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது. மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்த‌து. அபிஷேக் ஷர்மா 43 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய பஞ்சாப், 15 புள்ளி ஒரு ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்த‌து. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. லிவிங்ஸ்டன் 49 ரன்களை எடுத்தார். குறைந்த ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பஞ்சாப் வீர‌ர் ஹர்பிரீத் ப்ரார் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்