டெல்லியை வெளியேற்றி பிளேஆப் ரூட்டை கிளியர் செய்துகொடுத்த மும்பை - கொண்டாடும் RCB ஃபேன்ஸ்

ஐபிஎல் 69வது லீக் போட்டியில் டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது.
x
ஐபிஎல் 69வது லீக் போட்டியில் டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் களமிறங்கய டெல்லி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்த‌து. அதிகபட்சமாக ரோமன் போவல் 43 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய மும்பை, 19 புள்ளி ஒரு ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்த‌து. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷான் 48 ரன்களை எடுத்தார். டெல்லி அணியின் முக்கிய 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.


Next Story

மேலும் செய்திகள்