மகளிர் உலக குத்துச்சண்டை போட்டியில்..தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை நிகாத் சரீன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
x
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை நிகாத் சரீன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 12வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிகாத் சரீன், 52 கிலோ எடை பிரிவில் தாய்லாந்து வீராங்கனை ஜிட்பாங்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் ஜிட்பாங்கை வீழ்த்திய நிகாத் சரீன், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தெலங்கானா மாநிலம் நிசாமாபாத்தை சேர்ந்த 25 வயது நிகாத் சரீனுக்கு, பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்