ஐபிஎல் 2022: வாய்ப்பை தக்கவைத்தது டெல்லி - வெளியேறியது பஞ்சாப்

ஐபிஎல் கிரிக்கெட் 64வது லீக் போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
x
ஐபிஎல் கிரிக்கெட் 64வது லீக் போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்சல் மார்ஸ் 63 ரன்களை எடுத்தார். பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. டெல்லி சார்பில் ஷர்துல் தாக்கூர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்