சர்வதேச கிரிக்கெட் - விதிகள் மாற்றம் ! அக்டோபர் 1ம் தேதி முதல் அமல் |

சர்வதேச கிரிகெட்டில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் சில விதிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.
x
சர்வதேச கிரிகெட்டில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் சில விதிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. சர்வதேச கிரிக்கெட்டிற்கு விதிமுறைகளை வகுக்கும் MCC அமைப்பு சில விதிகளை மாற்றி அமைத்துள்ளது அதன்படி, கேட்ச் முறையில் பேட்டர் ஆட்டமிழக்கும் போது பேட்டர்கள் CROSS ஆனாலும், புதிதாக வரும் பேட்ஸ்மேன் தான் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஒருவேளை கடைசி பந்ததாக இருந்தால் மட்டும் விதிவிலக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோல, பந்துகளில் உமிழ்நீரை பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்பட உள்ளது. பந்துவீசுவதற்கு முன்னதாக NON STRIKER திசையில் உள்ள பேட்டர் கிரீஸை விட்டு வெளியேறும் போது MANKAD முறையில் அவுட் செய்தால், அவை ரன் அவுட்டாக கருதப்படும் என விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்