துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதிப்போட்டிக்கு வெஸ்லி முன்னேற்றம்

துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குள் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி நுழைந்துள்ளார்.
துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதிப்போட்டிக்கு வெஸ்லி முன்னேற்றம்
x
துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குள் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி நுழைந்துள்ளார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் கனடா வீரர் ஷாபோவலோவும், செக் குடியரசு வீரர் வெஸ்லியும் மோதினர். 3 செட்களும் டைபிரேக்கர் வரை சென்று பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6க்கு 7, 7க்கு 6, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வெஸ்லி போராடி வெற்றி பெற்றார். இதன்மூலம், இறுதிப்போட்டிக்கும் அவர் முன்னேறினார். இன்று இரவு  நடைபெறும் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் ரூப்லெவுடன் வெஸ்லி மோதுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்