கடைசி ஓவரில் த்ரில் வெற்றி - டி20 தொடரையும் கைப்பற்றியது இந்தியா | iNDVsWI |

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி உள்ளது.
x
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி உள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2 ஆவது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 52 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு178 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஏற்கனவே ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, இதன் மூலம் டி20 தொடரையும் கைப்பற்றி உள்ளது. சிறப்பாக ஆடிய இந்திய வீரர் ரிஷப் பண்ட்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்