இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா? கங்குலி பதில்

வரும் மே மாதம் மகளிர் டி20 சேலஞ்ச் போட்டிகள் நடத்தப்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
x
வரும் மே மாதம் மகளிர் டி20 சேலஞ்ச் போட்டிகள் நடத்தப்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

மகளிர் ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்கப்படாத நிலையில், எதிர்காலத்தில் இந்தியாவில் மகளிர் ஐபிஎல் போட்டியை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் மகளிர் டி20 போட்டி இந்த ஆண்டு மே மாதம் நடைபெறும் ஐபிஎல் தொடரின் பிளே-ஆப் சுற்றின் போது  நடைபெற இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். மேலும், இம்முறை ஐபிஎல் போட்டிகளை மும்பை மற்றும் புனேவில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த கங்குலி, இந்தியாவின் 500வது ஒரு நாள் போட்டியில் தான் கேப்டனாக விளையாடிய நிலையில், தற்போது பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்தியாவின் ஆயிரமாவது ஒருநாள் போட்டி ரசிகர்களின்றி நடைபெற இருப்பது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்