ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 4 மணி நேரம் 42 நிமிடம் நீடித்த ஆட்டம்

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ரஷ்யாவை சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் முன்னேறி உள்ளார்.
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 4 மணி நேரம் 42 நிமிடம் நீடித்த ஆட்டம்
x
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ரஷ்யாவை சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் முன்னேறி உள்ளார்.

மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவும், கனடா வீரர் ஃபெலிக்ஸும் மோதினர். போட்டியின் தொடக்கத்தில், முதல் 2 செட்களை வென்று, மெத்வதேவிற்கு இளம் வீரர் ஃபெலிக்ஸ் அதிர்ச்சி அளித்தார். எனினும் பின்னர் மீண்டெழுந்த மெத்வதேவ், 3வது செட்டை 7-க்கு 6 என்ற கணக்கில் தனதாக்கினார். 4வது செட்டையும் 7-க்கு 5 என்ற கணக்கில் மெத்வதேவ் கைப்பற்றியதால், கடைசி செட்டில் அனல் பறந்தது. வெற்றிக்காக இரு வீரர்களும் மல்லுக்கட்டிய நிலையில், கடைசி செட்டை 6-க்கு 4 என்ற கணக்கில் கைப்பற்றி காலிறுதியில் மெத்வதேவ் வென்றார். 4 மணி நேரம் 42 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் போராடி வெற்றி பெற்ற மெத்வதேவ், அரையிறுதிக்கும் முன்னேறினார்.

Next Story

மேலும் செய்திகள்