மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: ரோகித் கேப்டன்சியில் விளையாடும் கோலி!

மே. தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் - இந்திய அணி அறிவிப்பு.. ரவி பிஷ்னோய், தீபக் ஹூடாவிற்கு புதிதாக வாய்ப்பு...பும்ரா, ஷமி இருவருக்கும் தொடரில் ஓய்வு
x
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இரு தொடர்களுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட உள்ள நிலையில், கோலி, ராகுல், பண்ட், ஷ்ரேயாஸ் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம் பெற்று உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய், ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா ஆகியோர் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். காயம் குணமடையாததால் ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. பும்ரா, ஷமி ஆகிய இருவருக்கும் இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 6ம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் தொடங்க இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்