2வது ஒருநாள் போட்டி - தென்னாப்பிரிக்கா வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, தொடரை கைப்பற்றியது.
x
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, தொடரை கைப்பற்றியது.  தென்ஆப்பிரிக்காவின் பார்ல்(Paarl) நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் குவித்த‌து. தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீர‌ர்கள், 48 புள்ளி ஒரு ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றனர். அந்த அணியில் குயிண்டன் டி காக்(Quinton de Kock) 78 ரன்களும், ஜனிமேன் மலன்(Janneman Malan) 91 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜியம் என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது.


Next Story

மேலும் செய்திகள்