ஆஷஸ் டெஸ்ட் - கடைசி ஓவர் திக்.. திக்.. நிமிடங்கள்

இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆன்டர்சனை ஆஸி. வீரர்கள் சூழ்ந்து கொண்ட போட்டியின் கடைசி நிமிட பரபரப்பு காட்சிகள் வைரலாகி வருகிறது.
x
ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து போராடி டிரா செய்த நிலையில், அந்த போட்டியின் கடைசி நிமிடங்கள் பரபரப்பாக இருந்தன. ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் இறுதி ஓவரை வீசிய நிலையில், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆன்டர்சன் எதிர்கொண்டார். 8 ஃபீல்டர்கள் ஆன்டர்சனை சூழ்ந்தபோதும், பதற்றம் அடையாமல் ஆன்டர்சன் விளையாடினார். களத்துக்கு வெளியே அமர்ந்திருந்த இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ், தனது ஜெர்ஸியால் முகத்தை மூடிய நிலையில், கடைசி பந்தை திறம்பட ஆன்டர்சன் எதிர்கொண்டதால் போட்டி டிரா ஆனது. ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு நகர்த்திய இந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்