வெண்கலம் வென்றது இந்தியா - பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல் |

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெண்கலப் பதக்கம் வென்று உள்ளது.
x
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே துணை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து, முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து இருந்தன. பின்னர் நடைபெற்ற 2ம் பாதி ஆட்டத்தில், இந்திய வீரர்கள் சுமித், வருண் குமார், ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து அசத்தினர். பாகிஸ்தான் தரப்பில் 2 கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்ட நிலையில், பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 4க்கு 3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்து, இந்தியா வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியது.


Next Story

மேலும் செய்திகள்