ஜப்பானை வீழ்த்தி அசத்தல் - சாம்பியன் பட்டம் வென்றது தென் கொரியா

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் முதல் முறையாக தென் கொரியா சாம்பியன் பட்டம் வென்று உள்ளது.
x
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி முதல் முறையாக தென் கொரியா சாம்பியன் பட்டம் வென்று உள்ளது. டாக்கா நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானுடன் தென் கொரியா மோதியது. முழு நேர ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்து சமநிலை வகித்தன. இதனால், வெற்றியாளரைத் தீர்மானிக்க ஷூட்-அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் 4க்கு 2 என்ற கோல் கணக்கில் தென் கொரியா வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.


Next Story

மேலும் செய்திகள்