ரசிகர்களுக்கு யுவராஜ் சிங்கை நினைவுப்படுத்திய தேவ்தத் படிக்கல்

ஐபிஎல் தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே அதிரடியாக அரை சதம் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் தேவ்தத் படிக்கல்....
ரசிகர்களுக்கு யுவராஜ் சிங்கை நினைவுப்படுத்திய தேவ்தத் படிக்கல்
x
ஹைதராபாத் அணிக்கு எதிரான மோதலில் , பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச் , பார்த்திவ் பட்டேல் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , யாரும் எதிர்பாராத விதமாக புதிய வீரர் தேவ்தத் படிக்கல் களமிறக்கப்பட்டார்.

இடது  கை பேட்ஸ்மனான தேவ்தத் படிக்கல் ,  முதல் போட்டியில் களமிறங்குகிறோம் என எவ்வித பயமும் இன்றி புவனேஷ்வர் குமார் , சந்தீப் சர்மா, நடராஜன் ஆகியோரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். தேவ்தத்தின் அதிரடியான ஆட்டத்தால் பெங்களூரு அணி முதல் 10 ஓவர்களில் 80 ரன்களுக்கு மேல் எடுத்தது. 42 பந்துகள் விளையாடிய அவர் 8 பவுண்டரிகள் அடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் சில ஷாட்கள் யுவராஜ் சிங்கை நினைவுபடுத்துவது போல் இருந்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்தனர்..

20 வயதான தேவ்தத் படிக்கல் கேரள மாநிலம் எடப்பல்லை சேர்ந்தவர்... பெங்களூருக்கு இடம் பெயர்ந்த பிறகு , கர்நாடகா கிரிக்கெட் அகடாமியில் பயிற்சியை தொடங்கினார். 2014ம் ஆண்டுக்கு பிறகு தேவ்தத்திற்கு கர்நாடகா மாநில ஜூனியர் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் இருந்து தனது திறமையால் அற்புதமாக ஆடி , கிரிக்கெட் பயணத்தில் முன்னேறி சென்றார் தேவ்தத்.. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்டக் அலி தொடரிலும் , விஜய் ஹசாரே தொடரில் அதிக ரன்களை குவித்து
ஐபிஎல் அணிகளின் கவனத்தை பெற்றார். எதிர்பார்த்தபடி ஐபிஎல் ஏலத்தில் தேவ்தத்தை பெங்களூர் அணி வாங்கியது..தேவ்தத் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்களின் கவனமும் அவர் மீது திரும்ப வாய்ப்பு இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்