இந்திய ஜாம்பவான்கள் அணி 2வது வெற்றி - இர்பான் பதான் அபார ஆட்டம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில் இந்திய ஜாம்பவான்கள் அணி 2வது வெற்றியை பதிவு செய்தது.
இந்திய ஜாம்பவான்கள் அணி 2வது வெற்றி - இர்பான் பதான் அபார ஆட்டம்
x
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில் இந்திய ஜாம்பவான்கள் அணி 2வது வெற்றியை பதிவு செய்தது. நேற்றிரவு மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய ஜாம்பவான்கள் அணியும் - இலங்கை ஜாம்பவான்கள் அணியும் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை ஜாம்பவான்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இந்திய ஜாம்பவான்கள் அணி சார்பில் முனாப் படேல் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனைதொடர்ந்து விளையாடிய இந்திய ஜாம்பவான் வீரர்கள் சற்று தடுமாறினர். பின்னர் கைப், இர்பான் பதான் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தனர். 6 பந்துகள் மீதம் வைத்து இந்திய ஜாம்பவான்கள் அணி வெற்றி பெற்றது. போட்டியில் முகமது கைப் அற்புதமாக கேட்ச் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்